ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்ட மேலும் 65 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

டிக்கோயா , தரவளை தேவாலயத்தில் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்ட மேலும் 65 பேர் (01/04) முதல் எதிர்வரும் 14 திகதிவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.கடந்த 11,12,13,14 ஆம் திகதிகளில் குறித்த தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனைக்கூட்டதில் இந்திய தமிழகத்தை சேர்ந்த மத போதகர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார்.பின்னர் குறித்த மத போதகருடன் டிக்கோயா தரவளை தேவாயலத்தின் மதபோதகரும் யாழ்பாணம் சென்று வந்தமை தெரியவந்துள்ளதுஇந் நிலையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக கடந்த 28 ஆம் திகதி முதல் டிக்கோயா தரவளை தேவாலய போதகர் உட்பட 9. பேர் தேவாலயத்தில்14 நாட்களுக்கு தனிமைப் படுத்தியதோடு (30/03) தேவலாயத்தை சூழவுள்ள தரவளை பிரதேசத்தை சேர்ந்த 200 குடும்பங்ளை சேர்ந்த சுமார் 800 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் குறித்த ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட 65 பேர் இன்றய தினம் தத்தமது வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.இன்ஞஷ்ரி , பிலிங்பொனி, பட்டல்கல, போடைஸ், இன்வரி ,என்பீல்ட , ஒட்டரி மற்றும் நோர்வூட் சென்ஜோன்டிலரி ஆகிய பகுதிகளில் சேர்ந்த 65 பேரே இவ்வாறு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளர் என நோர்வூட் மற்றும் பொகவந்தலா சுகாதார பரிசோகர்கள் தெரிவிக்கின்றனர்.