வடமராட்சி கிழக்கில் கடற்படை  அனுமதி பெற்றே கடற்றொழிலில் ஈடுபடமுடியும்!

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் மீன் பிடிக்க வழங்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தி ஒரு சிலர் இந்தியா கேரளாவுக்கு கடல் வழியாக சென்று கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ள  நிலையில் இந்தியாவிலிருந்து கொரோணா தொற்று ஏற்படலாம் என்பதால் மீன் பிடி அனுமதியை மீள் பரிசீலனை செய்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10:00 மணிக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மண்டபத்தில் பிரதி பிரதேச செயலர் திரு தயானந்தன் தலமையில் இடம் பெற்றது. இதற்க்கு வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் லெப்ரினன் கொமாண்டர் எம். பைசார், 

 வடமராட்சி கிழக்கிலுள்ள அனைத்து கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்  பிரதிநிதிகள்,கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர், பொது முகாமையாளர், ஆகியோர் கலந்து கொண்டு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வரை எவ்வாறு பாதுகாப்பான  கடற்றொழிலில் ஈடுபடுதல் என்று ஆராயப்பட்டுள்ளது.
கடற்றொழிலிற்க்கு செல்வதற்க்கு ஒரு படகில் இருவர் மட்டுமே செல்ல முடியும் என்றும், அவ்வாறு செல்பவர்கள் அருகிலுள்ள கடற்படையின் அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்றும், மீன் பிடி நிறைவுற்று மீண்டும் திரும்பி வருகின்ற போது கடற்படையின் பரிசோதனைக்கு உட்பட்டே வெளியேற வேண்டும் என்றும், பிடிக்கப்படுகின்ற மீனினை சந்தைகளில் ஏலம் கூறி விற்பனை செய்ய முடியாது என்றும், கட்டாயம் ஒவ்வொருவரும் முக கவசம் அணிந்தே தமது தொழில்களில் ஈடுபட வேண்டும் என்றும், ஒவ்வொரு தொழுலாளருக்கும் வழங்கப்படும் அனுமதி அட்டை அந்த கிராமத்திற்க்குள்ளேயே செல்லுபடி ஆகும் என்றும், மீன் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு பிறிதானா அனிமதி பிரதேச செயலகம் ஊடகா பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதன் பின்னரே இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.
மேலும் இங்கு கலந்து கொண்ட மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கும் போது தமது மக்களுக்கான உணவு பொருட்கள் பலத்த தட்டுப்பாடு நிலவுவதாகவும், குறிப்பாக சிறுவர்களுக்கான பால்மா அரிசி, கோதுமை தேங்காய் உட்பட்டவையை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்ததுடன்,  முள்லகியான் ஆரம்ப சுகாதார நிலையத்திறக்கு ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை மருத்துவர் கடமைக்கு சமூகமளிக்க வில்லை என்றும் இதனால் தமது மக்கள் சாதாரண சுகயீனங்களுக்கு கூட சிகிச்சை பெற்றுக் கொள்ளமுடியாதுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்