இலங்கை ரூபா தொடர்ந்து வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 192.50 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் இன்றைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இவ்வாறு தொடர்ந்து வீழ்ச்சியடையுமாக இருந்தால், இலங்கை எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என பொருளியலாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்