ஆராதணையில் ஈடுபட்ட போதகர் உட்பட 08 கொரோனா தொற்று 14 நாட்களுக்கு மூடப்பட்டது டிக்கோயா தரவளை பிரதேசம்!

அட்டன் பொலிஸ் பிரிவு டிக்கோயா தரவளை பிரதேசம் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கொரோனா தொற்று அபாயம் காரணமாக அட்டன் பொலிஸார்,சுகாதார பரிசோகர்கள் மற்றும் அட்டன் டிக்கோயா நகசபை இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிக்கோயா தரவளை பிரதேத்திலுள்ள கிருஸ்வ ஆலயத்தில் இடம்பெற்ற ஆராதணையில் ஈடுபட்ட போதகர் உட்பட 08 பேர் தேவாலயத்தினுள் கொரோனா தொற்று அபாயம் காரணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த ஆராதணை கூட்டத்திற்கு கலந்து கொண்டவர்கள் தொடர்பில் முழுமையான தகவல் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள நிலையில் குறித்த தேவாலயம் அமைந்துள்ள தரவளை கீழ் பிரிவு பிரதேசம் பொலிஸாரினால் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளி பிரதேசத்திற்கு செல்வதோ வெளியார் உள்நுளைவதோ 14 நாட்களுள்கு முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் குறித்த பிரதேசத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்மை குறிப்பிடத்தக்கது.