பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட 18 பேர் கைது – பொலிஸ் !

ஹொரோவொப்பொத்தானை கிவ்லேகட பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டு தற்போதுள்ள ஊரடங்கு சட்ட விதிகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் 18 பேரை பொலிஸ் கைது செய்துள்ளது.

80 பேர் அளவில் தொழுகையில் ஈடுபட்டாலும் ஏனையவர்கள் தப்பிச் சென்றுவிட்டார்கள். கைது செய்யப்பட்ட பள்ளிவாசலின் மௌலவி , தலைவர்உட்பட்டோர் எச்சரிக்கப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.