பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கிருமி நீக்கல் நடவடிக்கை

யாழ்.பருத்துறை வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் கிருமி நீக்கும் நடவடிக்கை இன்று (28) காலை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. கொழும்பிலிருந்து வந்துள்ள சிறப்பு கிருமி நீக்கல் படையணி இந்த பணியை செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து கிருமி நீக்கல் சிறப்பு நடவடிக்கைக்காக யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்துள்ள பொலிஸ் அதிரடிப்படையின் குறித்த கிருமி நீக்கல் படையணி பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தமது பணியை திறம்பட ஆற்றிவருகின்றனர்.