அமெரிக்கா மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்-ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக  2 டிரில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டிற்கான ஆவணத்தில் நேற்றைய தினம் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நிவாரண நிதி இது என சர்வதேச ஊடகங்கள்  மேலும் தெரிவித்துள்ளன. இந் நிதி தொடர்பில் புதன்கிழமை செனட் சபையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி,  நேற்றைய தினம்வரை அமெரிக்காவில்  92,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயளர்கள் இனம்காணப்பட்டுள்ளதுடன் இறப்பு எண்ணிக்கை 1,380 ஆக உள்ளது.எனினும் இதுவரை அமெரிக்காவில் ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை இந்நிலையில், கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக  2 டிரில்லியன் டொலர் நிவாரண நிதி ஒதுக்கீட்டிற்கான ஆவணத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.இதன் போது உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி,”இது நமது நாட்டின் குடும்பங்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு அவசரமாகத் தேவையான நிவாரணத்தை வழங்கும், என தெரிவித்துள்ளார்.