நடிகரும் வைத்தியருமான சேதுராமன் மாரடைப்பில் மரணம்!

இவர் 2013ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமானவர்.சேதுராமன் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் தமிழ்த் திரைப்படத்துறையில் கால் பதிப்பதற்கு நடிகர் சந்தானம் பெரும் உதவியாக இருந்தார்.லட்டு தின்ன ஆசையா படம் உட்பட வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 என இதுவரை நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.தோல் நோய் மருத்துவரான இவர் சென்னையில் தனியாக கிளினிக் நடத்திவந்தார்.இளம் வயதில் மருத்துவம் படித்த ஒருவர் மாரடைப்பில் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.