வடமராட்சி கிழக்கில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்கல்.! 

ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட நாளாந்த தொழிலிற்க்கு சென்று வருவோருக்கான உலர் உணவுகள் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வழங்கி வைக்கப்பட்டன. யாழ் மாவட்ட செயலகத்தால் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலதலகத்திறக்கு உட்பட்ட பகுதிகளில் மிகவும் வறிய மக்களுக்காக. தலா இரண்டு கிலோ வீதம் 300 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இப் பொதிகள் வடமராட்சி கிழக்கு முள்ளியான் கிராம சேவகர் பிரிவிலிருந்து மணல்காடு வரையான 15 கிராம சேவகர் பிரிவுகளிலும்  இராணுவமே இப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

இதே வேளை  உணவின்றி இருந்த குடாரப்பு பகுதியை சேர்ந்த  இரண்டு குடும்பங்களுக்கு பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் வே.பிரசாந்தனும், பணம் இருந்தும் நேற்று உணவு பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாமல் இருந்த ஐந்து குடும்பங்களுக்கும் green future nation foundation நிறுவனமும்  இன்று வழங்கி வைத்தனர்.
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டருப்பதனால் கிளிநொச்சி பகுதியிலிருந்து வடமராட்சி கிழக்கு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் மொத்த வியாபாரிகள் ஆனையிறவுடன் தடுத்து நிறுத்தப்பட்டமையால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேற்றைய தினம் உள்ளூரில் பொருட்கள் இன்மையால் பருத்தித்துறை மற்றும் பளை பகுதிகளிலேயே மக்கள் சென்று பொருட்களை கொள்வனவு செய்தனர்.இதே வேளை ஊரடங்கு தளர்த்ப்படும் வேளைகளில் மக்களுக்கான நுகர்வு பொருட்களை வழங்குவதற்கு தம்மிடம் உணவு பொருட்கள் கையிருப்பு இல்லை என்றும் வழமையாக தமது பகுதிகளிறக்கு மொத்த விநியோகம் செய்த கிளிநொச்சி பகுதி மொத்த வியாபாரிகளை தமது பகுதிக்கு அனுமதிக் வேண்டும் என்றும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்
வடமராட்சி