யாழ் ஊரடங்கு நீடிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கிளிநொச்சி , முல்லைத்தீவு , மன்னார் ,வவுனியா மாவட்டங்களில் ஏற்கனவே அறிவித்தபடி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மார்ச் 27ஆம் திகதி, நாளை வெள்ளிக்கிழமை, காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு, மீண்டும், அதே தினம் மதியம் 2 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.இந்த மாவட்டங்களில் மார்ச் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுலாகும்.
யாழ் மாவட்டத்தில் மட்டுமே ஊரடங்கு மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.