அவசர நிவாரணப்பணியினை மேற்கொண்ட மனிதநேய வாதி.

யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த    மனிதநேய கொடையாளர்  தங்கவேல், தங்காதரன் அவர்களால் தனது சொந்த நிதியின் மூலமாக கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கின் மூலம் முடக்கப்பட்ட அன்றாட கூலித்தொழிலாளர்கள்,

மற்றும் வயது முதிர்ந்து தனித்து வாழ்கின்ற முதியவர்களின் அன்றாட உணவுத்தேவையினையும் கருத்திற்கொண்டு நாகர்கோவில்,குடாரப்பு,உடுத்துறை கிராமங்களில் வசிக்கும் சுமார் 65 குடும்பங்களுக்கான நிவாரண உதவிகள் இன்று ரூபா  130000/= பெறுமதியான  உலர் உணவுப்பொதிகளை நேரடியாக தனது வாகனத்தில் கொண்டு சென்று வழங்கியிருந்தார். இந்த செயற்பாட்டில், அவரது சகோதரரும்,சமூக செயற்பாட்டாளருமாகிய திரு தங்கவேலாயும், தங்கரூபன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் கிராம இளைஞர்கள்  கலந்து இதனை வழங்கியிருந்தனர்.