மதுபோதையில் வீதியில் அலைந்து திரிந்த பொதுஜன பெரமுன கட்சியின் யாழ்.வட்டுகோட்டை அமைப்பாளர் கைது..!

கொரோனா வைரஸ் பரவரை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவியரீதியில் அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்ப்படுத்தியிருக்கும் நிலையில், மதுபோதையில் வீதியில் அலைந்து திரிந்த பொதுஜன பெரமுன கட்சியின் யாழ்.வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர் வட்டுக்கோட்டைத் தொகுதியின் அமைப்பாளர் திருலோகநாதன் என பொலிசார் தெரிவித்தனர். நேற்று இரவு பொலிஸார் ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொழுது இவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மதுபோதையில் கைது செய்யப்பட்ட இவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.