நாளை (27)ஊரடங்கு சட்டம் எந்தெந்த இடங்களுக்கு இதோ தெரிந்துகொள்ளுங்கள்!

கொழும்பு ,கம்பஹா , களுத்துறை மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல்வரை தொடரும்..
* யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , புத்தளம் , மன்னார் , முல்லைத்தீவு , வவுனியா ஆகிய மாவட்டங்களில் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளரத்தப்படும் ஊரடங்கு அன்று பிற்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுலாகும்.
* இதர மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 12 மணிக்கு அமுலுக்கு வரும் .
ஊரடங்கு நேரத்தில் ஊடக மற்றும் அத்தியாவசிய சேவைகள் இயங்கும். மாவட்டத்தை விட்டு மாவட்டம் யாரும் செல்ல முடியாது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இடம்விட்டு இடம் மாற்ற முடியாது. விவசாயிகள் – சிறு தேயிலை தோட்ட மற்றும் ஏற்றுமதி உப உணவுப் பயிர் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.விமான நிலையம் மற்றும் துறைமுக செயற்பாடுகள் இருக்கும்.
– ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு