நாட்டில் 600 சோதனைச்சாவடிகள்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மக்களின் இடநகர்வுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன்படி இலங்கையில் சுமார் 600 சோதனைச்சாவடிகள் உடனடியாக அமைக்கப்படவுள்ளன. இதன்படி, ஒவ்வொரு பிரதேசத்தையும் விட்டு, மறு பிரதேசத்திற்கு மக்களின் இடமாற்றம் கட்டுப்படுத்தப்படவுள்ளது.
கொரோனா சந்தேகநபர்கள் சிலர் பொறுப்பற்ற விதமாக பல இடங்களிற்கும் நடமாடியதால். வைரஸ் தொற்று பல இடங்களிற்கும் பரவியிருக்கலாமென கருதப்படுகிறது. இதனால் மக்களின் நகர்வதை கட்டுப்படுத்த பிரதேசரீதியாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.