கொழும்பிலிருந்துவந்த சிறப்பு படையணி இன்று காலை யாழ்.நகரில் தமது பணியை தொடங்கினர்..!

யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் கிருமி நீக்கல் சிறப்பு நடவடிக்கையில் இன்று அதிகாலை தொடக்கம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறங்கியிருக்கின்றனர்.
இன்று காலை யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இந்த பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இதனை யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்ஸன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
மேலும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள சிறப்பு கிருமி நீக்கல் படையணி இந்த பணியை ஆரம்பித்திருக்கின்றனர். இதன்போது பிரதேச செயலர், மாநகரசபை ஆணையாளர்,
கிராமசேவகர், மாநகரசபை ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.