கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைந்தார்!

கொரோனா வைரஸ்தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

ஏற்கனவே சீனப் பெண்மணி ஒருவரும் சுற்றுலா வழிகாட்டியான இலங்கையர் ஒருவரும் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியேறியிருந்தனர்.இதனையடுத்து மூன்றாவது நபராக ஒருவர் குணமடைந்துள்ளார்.

இதேவேளை தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 201 பேர் கண்டைக்காடு மற்றும் புனாணை முகாம்களில் இருந்து முற்றாக உடல்நலத்துடன் வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையில் கொழும்பில் தொழில்களுக்காக தங்கியிருக்கும் வெளிமாவட்டத்தினர் கொழும்பிலிருந்து வெளியேறமுடியாதென பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கூடுதலான தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அது யார் ஊடாகவும் பரவலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.