ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பே மக்கள் வெள்ளத்தால் நிரம்பிய வடமராட்சி.  

3 நாட்கள் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் நேற்று காலை 6 மணி தொடக்கம் 2 மணிவரை தளர் த்தப்பட்டிருந்த  நிலையில் யாழ் வடமராட்சியில்   முக்கிய நகர் பகுதிகளான பருத்தித்துறை நெல்லியடி, மந்திகை, பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மருந்தகங்கள் மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 84 மணித்தியாலங்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த  நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் மற்றும் எரிபொருள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்க்காக
அதிகளில் கூடியிருந்தனர்.
இந்நிலையில் பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் கட்டுப்படுத்தப்பட்டதுடன், நீண்ட வரிசையில் இடைவெளி விட்டு நிறுத்த நடவடிக்கை எடுத்தனர். எனினும் ய பல இடங்களில் அது சாத்தியப்படாமலபோயிருந்தது.
பொருட்களுக்கு தட்டுப்பாடு
பல உணவுப் பொருட்களுக்கு பலத்த தட்டுப்பாடு  நிலவியது.  குறிப்பாக அரிசி மற்றும் கோதுமை மா என்பனவற்றிற்க்கே இவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதே வேளை பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்கம், புலோலி பல நோக்கு கூட்டுறவு சங்கம் என்பன மக்களுக்கு பொருட்களை நியாய விலையில் வழங்கியுள்ளன,   எனினும் வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் மணற்காடு சந்தி, மாமுனை, செம்பியன் பற்று வடக்கு ஆகிய மூன்று கிளைகளில் மட்டுமே மட்டுப் படுத்தப் பட்ட அளவில் விநியோகிக்ப்பட்டன.
வடமராட்சி கிழக்கில் 15 வரையான பலநோக்கு கூட்டுறவு சங்க கிளைகள் இயங்கி வந்த நிலையில் தற்போது மூன்று கிளை மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெரிதும் சிரமங்களை எதிர் கொண்டனர்.இதை விட தனியார் பல் பொருள் வாணிபங்கள் தமது வியாபார நிலையத்திற்குரிய பொருட்களை கொள்வனவு செய்தவதில் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
https://youtu.be/aXVeyhQx45s