இலங்கையின் நம்பிக்கைதரும் சாதனை..! 3வது நோயாளி சுகமடைந்தார், 99 பேர் சிகிச்சையில், புதிதாக எவருமில்லை.!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3வது நோயாளி சுகமடைந்து இன்று வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
தொற்று நோயியல் மருத்துவமனையில் இதுவரை 102 கோரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அனுமதிக்கப்பட்டி ருக்கின்றனர். அவர்களில் 3 பேர்(சீன பெண் உட்பட்) குணமடைந்திருக்கின்றனர்.
மேலும் 99 நோயாளிகள் தற்போதுவரை சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று நண்பகல் வரையில் புதிதாக நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.