1 வது கொரோனா நோயாளியின் மனைவியால் யாழ்.சண்டிலிப்பாயில் 214 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்..! தொடர் தேடுதல் தீவிரம்.!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 214 பேருக்கு வைரஸ் தொற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் ஊடகங்களுக்கு கூறியிருக்கின்றார்.
யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டிருக்கும் 1வது கொரோனா நோயாளியின் மனைவி சமுர்த்தி உத்தியோகத்தராக பணியாற்றும் நிலையில், 214 சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி கொடுப்பனவினை அண்மையில் வழங்கியுள்ளார்.
குறித்த 214 பேருமெ தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். என மாவ ட்ட செயலர் மேலும் கூறியுள்ளார்.