யாழ்.மாவட்ட மக்களுக்கு போதனா வைத்தியசாலை பணிப்பாளா் அவசர கோாிக்கை..! தயவு செய்து பின்பற்றுங்கள்.!

யாழ்.செம்மணி பகுதியில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகா் நடாத்திய ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டவா்கள், குறித்த மதபோதக ருடன் பழகியவா்கள் அனைவரும் ஒளிவு மறைவில்லாமல் தங்களை அடையாளப்படுத்துமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி கூறியிருக்கின்றாா்.
இதன்போது மேலும் அவா் கூறுகையில், மதபோதகருடன் பழகியவா்கள் அனைவரும் தங்களை அடையாளப்படுத்துங்கள், 2 வாரங்களுக்கு வீ ட்டில் தனிமையில் இருங்கள், காய்ச்சல் அல்லது சுவாச நோய் வந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுங்கள், தடுப்பு நடவடிக்கையில் மக்களும் பங்காளிகள் ஆகவேண்டும்.
பங்காளிகளானால் மட்டுமே இந்த ஆபத்தை வெல்ல முடியும். அதிகளவானா்கள் தொற்றுக்குள்ளானால் அவா்களை பராமாிக்க வசதி இல்லை. ஒரு சிலா் செய்யும் சிறு தவறு ஒரு சமுதாயத்தை மிகப்பெரும் ஆபத்தில் தள்ளகூடும் என அவா் கூறியிருக்கின்றாா்.