மீனவர்களுக்கும் நிவாரணம் பெற்றுத் தருமாறு அரசை கோரும் மீனவர் சம்மேளன பிரதிநிதிகள்.

தற்போது இலங்கை முழுவதும் அமுல் படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமெனில்  அன்றாடம் கடற்றொழிலுக்கு சென்று தமது உணவு தேவைகளை பூர்த்தி செய்யும் மீனவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவரும் வடமாகாண கிராமிய மீனவர் இணைப்பாளருமான திரு.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இன்று அவர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது
தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமானல் தமது மீனவர்கள் பெரிதும் பாதிக்க படுவார்கள் என்றும் தமது கிளை சங்கங்கள் தம்முடன் தொடர்பு கொண்டு தமது வாழ் அதாரத்திற்க்கு உதவுமாறு கொரிக்கை முன் வைத்துள்ளதாகவும், இதனால் அரசு உரிய கவனம் எடுத்து தமது அன்றாட மீன்பிடி தொழிலையே நம்பியிருக்கின்ற மீனவக் பெரிதும் பாதிக்க படுவதாகவும் இதனாலேயே தாம் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை வல்வெட்டி துறை மற்றும் பருத்தித்துறை பொலிசார் கிராமம் கிராமமாக கொரோணா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தல்கள் வழங்கி வருவதுடன் ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கட்டுப்படுத்த வீதிகளில் சோதனை சாவடிகளும் ஏற்படுத்தி சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றனர்.இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டிதுறை மந்திகை ஆகிய வடமராட்சி நகரங்கள் வெறிச்சோடி காணப்படுவதுடன் வர்த்தகர் சங்கங்கள் மாவட்ட செயலரது அனுமதி பெற்று நாளைய தினம் வழங்குவதற்க்காக உணவு பண்டங்களை நேற்றும் இன்றும் களஞ்சியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்