கொரோனா வைரஸ் தொற்று 93 ஆக அதிகரிப்பு ஒளிந்திருப்போர் சம்பந்தமான தகவல் தந்துதவுமாறு வேண்டுகோள்!

புதிதாக சிலரை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதால் வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது .
வைரஸ் தொற்றியுள்ள சந்தேகத்தின் பேரில் 227 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இருவர் குணமடைந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை இத்தாலியில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படாமல் மறைந்திருக்கும் சிலர் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ள பொலிஸ் அவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் தருமாறு கேட்டுள்ளது.