வடக்குக்கான ஊரடங்கு சட்டம் நீடிப்பு!

யாழ்ப்பாணம் , மன்னார் , முல்லைத்தீவு , கிளிநொச்சி , வவுனியா மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுலாகும்.
யாழில் போதகர் ஒருவரின் ஊடாக கொரோனா தொற்று பரவி இருப்பதால் மக்களின் நலன்கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.