நாடு முழுவதும் வரும் 31-ம் தேதி வரை பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.!

புதுடெல்லி:

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கை ஒட்டி நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறியுடன் ரெயில்களில் பயணம் செய்பவர்களின் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் வைரஸ் வேகமாக பரவும் அச்சம் நிலவி வந்தது.
இந்நிலையில், கொரோனா சமூக தொற்றாக மாறுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாடு முழுவதும்  இன்று முதல் மார்ச் 31-ம் தேதி வரை பயணிகள் ரெயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரெயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.