கொரோனா ஒழிப்பு அனுபவ நுட்பங்களை இலங்கையுடன் பகிர்ந்தது சீனா!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்த தமது அனுபவங்களை சீன சுகாதாரத்துறை நிபுணர்கள் இலங்கையுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தமது போராட்டத்தின் அனுபவங்களையும், நுட்பங்களையும் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் சீனாவின் சுகாதாரத்துறை நிபுணர்கள் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் வீடியோ கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.இக்கலந்துரையாடலில் இலங்கை உள்ளிட்ட 18 தெற்காசிய நாடுகளின் பிரதிநிகள் பங்குபற்றியுள்ளனர். இலங்கையின் சார்பில் சிரேஷ்ட தொற்றுநோய்த் தடுப்பு வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.