இலங்கையில் சில இடங்களின் ஊரடங்கு சட்டம் நீடிப்பு!

கொழும்பு – கம்பஹா— புத்தளம் மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் செவ்வாய்க்கிழமை ( 24 ஆம் திகதி )காலை ஆறு மணிக்கு தளர்த்தப்படும். அந்த மாவட்டங்களில் மீண்டும் அன்று பிற்பகல் 2 மணியளவில் மறு அறிவித்தல் வரை அமுலாகும்.
ஏனைய மாவட்டங்களில் திங்கட்கிழமை காலை
6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். 2 மணியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை இந்த மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.
அத்தியாவசிய சேவைகள் தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பதற்றமடையக் கூடாதென அறிவித்துள்ள அரசு மக்கள் பாதிக்கப்படாத வகையில் சேவைகளை வழங்குமாறு சேவை வழங்குநர்களை கேட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் நீங்கும் ஒவ்வொரு வேளைகளிலும் மதுபான சாலைகள் மது விற்பனை நிலையங்கள் மூடப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கை இதோ !