வாசலிலேயே வழுக்கி விழுந்து கலகொட அத்தே ஞானசார தேரா்..!

நாடாளுமன்ற தோ்தலில் நாம் மக்கள் சக்தி கட்சி சாா்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடு வதற்காக கலகொட அத்தே ஞானசார தேரா் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகாிக்கப்பட்டிருக்கின்றது.
வேட்பாளரின் உறுதிமொழி அறிக்கையில் ஏற்பட்ட தவறு காரணமாக வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலும் நாம் மக்கள் சக்தி கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்சி ஞானசார தேரர் மற்றும் ரத்ன தேரர் ஆகியோரால் இணைத்து உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.