பருத்தித்துறை நகரசபை அமர்வில் கூச்சல் குழப்பம். தவிசாளர் மற்றும் முன்னணி உறுப்பினர்கள் சரமாரியான சொற்போர்.பல மணி நேரம் அமைதியின்மை!

பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் நகரபிதா திரு இருதயராசா தலைமையில் இரண்டு நிமிட இறை வணக்கத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து பல்வேறுபட்ட விடயங்களை ஆராயப்பட்டன.
பருத்தித்துறை பகுதியில் நகரசபை காணியில் சிறுவர் மகிழ்வகம் ஒன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கம்பிரலியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டு மேலதிகமாக நகரசபை நிதியிலும் அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்தாகவும், அதற்கு நகரசபை ஏனைய கட்சி நகரசபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு தமிழரசு கட்சி உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ஆகியோர் அழைக்க பட்டதாகவும் நகரசபை காணியில் அமைக்கப்பட்ட சிறுவர் மகிழ்வகத்திறக்கு நகரசபை தொடர்பான எந்தவித பதிவுகளும் இன்றி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது பெயர் மட்டும் பொறிக்க பட்தாகவும் அதனால் அதனை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் சபை அனுமதி பெறப்படாது பதிக்கப்பட்ட கல்வெட்டை உடனடியாக நீக்க வேண்டும் என்று முன்னணி உறுப்பினர்கள் பிரேரணை கொண்டுவந்ததன் அடிப்படையில் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாக அந்த கல் வெட்டை அகற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டதுடன் அதற்கு உண்டான செலவை நகரபிதா தனது சொந்த பணத்தில் செலுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்க பட்டது. அதனை தொடர்ந்து தவிசாளர் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்தார்.அதாவது தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ஒருவர் தன்னை கெட்ட வார்தவதைகளால் திட்டித் தீர்த்தாக. அதற்கு மறுப்பு தெரிவித்த முன்னணி உறுப்பினர் தான் அவ்வாறு எதுவும் சொல்லவில்லை எனவும் தனது பிள்ளைகள் கடவுள் மீது சத்தியம் செய்தார்.ஆனால் அதற்க்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தவிசாளர் குறிப்பிட்ட வேளை ஆதார்த்தை காண்பிக்க முடியாது என குறிப்பிட்ட வேளை முன்னணி உறுப்பினர் தன்னிடமும் தவிசாளர் சக உறுப்பினர்கள் மற்றும் தன்னையும் கேவலமாக திட்டியதாக நேரில் அதனை கேட்ட சக உறுப்பினர் ஒருவரது சாட்சியத்துடன் நிருபிக்க முற்பட்டவேளை தவிசாளர் மறுத்தார் அவ்வேளை முன்னணி உறுப்பினர் தவிசாளர் தொடர்பாக காரசாரமாக வசை பாடினர்.     இதனால் சபையில் பல மணிநேரம் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.  அதனை தொடர்ந்து 15 நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சபை கூடியது. தவிசாளருக்கு ஆலோசனை அலோசனை வழங்கிய ஈபிடிபி உறுப்பினர்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கும் நகரபிதா மற்றும் தமிழரசு கட்சி நகரசபை உறுப்பினர்களுக்கும் இடையில் இடம் பெற்ற வாக்குவதாங்களின் போது இடை இடையே எழுந்து ஈபிடீபி உறுப்பினர் ஒருவர் தவிசாளரை கேள்விகள் கேட்டும் இரு தரப்பையும் சமாதான படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்நகொண்டிருந்தார் இதே வேளை நகரசபை உப தவிசாளர் மதனி நெல்சன் சமரச நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அது பலனளிக்காது போக இடையில் சபையைவிட்டு எளுந்து சென்று மீண்டும் சபை ஒத்திவைத்து மீள ஆரம்பமானபோது சமூகளித்திருந்தார்
முன்னணி உறுப்பினரை சபையிலிருந்து வெளியேற்ற போவதாக மிரட்டய தவிசாளர்
தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக முன்னணி உறுப்பினர் குற்றச்சாட்டுகள் முன் வைத்து காரசாரமாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது தவிசாளர் அவ் உறுப்பினரை சபையிலிருந்து வெளியேறுமாறு பல தடவைகள் மிரட்டியிருந்தார்.இருந்தும் அதனை செவி மடுக்காத முன்னணி உறுப்பினர் தொடர்ந்தும் உரை நிகழ்த்தினார்.அதனை தொடர்ந்து சபை ஒத்திவைக்க பட்டு மீண்டும் ஆரம்பமாகியபோது முன்னர் பேசபயபட்ட விடயங்கள் எதுவும் மீள பேசப்படாது விடுமாறு தவிசாளர் தெரிவிக்க தொடர்ந்து நிகழ்ச்சி நிரலின்படி அமர்வு இடம் பெற்றது.
இன்றைய இவ் அமர்வில் காட்லி கல்லூரி வளைவு கட்ட அனுமதிப்பது.கட்டாக்காலி ஆடு மாடுகளை பிடித்து பாராமரித்து தண்டம் விதித்தல் அதற்கான தண்ட பண நிர்ணயம் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.