44 அரசியல் கட்சிகளும், 31 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல்!

ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக செவ்வாய்க்கிழமை மாலை வரை 44அரசியல் கட்சிகளும் 31 சுயேட்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதுடன் 264 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் பொலன்னறுவை மாவட்டத்திலே ஆகக்குறைந்த 2 சுயேட்சை குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் வன்னி மாவட்டத்திலே அதிகூடுதலான 25 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தி இருக்கின்றன.
இதேவளை நாளை நண்பகல் 12 மணிவரையே கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுக்கள் கையளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.