யாழ்.தோ்தல் மாவட்டத்தில் அடுத்தடுத்து வேட்புமனுக்கள் தாக்கல்..! தோ்தல் திருவிழா ஆரம்பம்.!

நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.தோ்தல் மாவட்டத்தில் பிரதான கட்சிகள் இன்று காலை வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கின்றன.
தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இன்று முற்பகல் 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் கட்சிகளின் சார்பில் முதன்மை வேட்பாளர்கள் வேட்புமனுகளைக் கையளித்தனர்.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு – இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சோ சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன்,
ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், பா.கஜதீபன், கு.சுரேந்திரன், திருமதி சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் தபேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேட்பு மனுவைக் கையளித்தார்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் முதன்மை வேட்பாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.