மிருசுவில் வடக்கு பத்திரகாளி கோவில் வீதி புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழா.!

மிருசுவில் வடக்கு பத்திரகாளி கோவில் வீதி புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழா 16/3/2020 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது

மிருசுவில் படித்த மகளிர் திட்ட துர்க்கை அம்மன் ஆலய சிவத்திரு ந.முகுந்தக்குருக்கள்  ஆசி வழங்கி சமய சம்பிரதாயங்களை ஆரம்பித்து வைத்தார்

கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட நிதி ஒதுக்கீட்டில் 10 லட்சம் ரூபா செலவில் வீதி புனரமைக்கப்படவுள்ளது

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ஐ.சிறீரங்கேஸ்வரன், தென்மராட்சி பிரதேச அமைப்பாளர் எஸ்.மெடிஸ்கோ, உதவி அமைப்பாளர் பிரகாஸ், நகரசபை அமைப்பாளர் அமீர், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ், 12ஆம் வட்டார நிர்வாக செயலாளர் க.ரஞ்சித்குமார் அகிலஇலங்கை முதலுதவி சங்க இந்து சமய தொண்டர் சபை ஆணையாளர் சிவதிரு.வை.மோகனதாஸ், மிருசுவில் வடக்கு வன்னியர் சனசமூக நிலையத்தின் தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்