பேரூந்துகளில் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டு வரும் வாகனங்களுக்கான கிருமி நாசினி தெழிக்கும் நடவடிக்கைகள் இன்று (18) முன்னெடுக்கப்பட்டன.
திருகோணமலை பஸ் நிலையத்தில் உள்ள பஸ்கள் உள்ளிட்ட வீதியோர வாகனங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகளை சுகாதாரப் பணியாளர்களுடன் கடற்படையினரும் இணைந்து செயற்பட்டார்கள்.
இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.