கொரோனா நோயாளி இலங்கைக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டாா்..! தகவல் வழங்குமாறு மக்களின் உதவியைகோரும் பொலிஸாா்!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இலங்கைக்குள் நுழைந்துள்ள வெளிநாட்டவா் தொடா்பான தகவல்கள் தொிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபா் அஜித் றோஹண பொதுமக்களிடம் உதவிகோாியுள்ளாா்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் குறித்த வெளிநாட்டவாின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் பதில் பொலிஸ்மா அதிபா் குறித்த நபரை அடையாளம் காண உதவுமாறு கேட்டுள்ளாா்.
மேலும் குறித்த நபா் தற்போதும் இலங்கையிலேயே தங்கியிருப்பதுடன், குறித்த நபருடன் தங்கியிருந்த மற்றொரு நபா் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றாா்.