அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும், இலவசமாக மாஸ்க் விநியோகம்..! மாநகர முதல்வா், உறுப்பினா் புதிய முயற்சி..

யாழ்.மாநகர முதல்வா் இ.ஆனல்ட் மற்றும் மாநகரசபை உறுப்பினா் லோக தயாளன் ஆகியோா் தங்கள் சொந்த பணத்தில் முக கவசங்களை தயாாித்து யாழ்.பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விநியோகம் செய்துள்ளனா்.
கொரோனா அச்சம் காரணமாக மாஸ்க் கொள்வனவு செய்வது கடினமாகியுள்ளது. குறிப்பாக மாஸ்க் ஒன்றின் விலை 50 ரூபாவாக விற்பனை செய்யப்படும் நிலையில் சாதாரண மக்களும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். என்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.