யாழ் உள்ளிட்ட சில இடங்களில் தனித்துபோட்டியிட சுதந்திரக் கட்சி முடிவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, 2020 பொதுத் தேர்தலில் சில மாவட்டங்களில் தனித்து போட்டியிடும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரேலியா, களுத்துறை, வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தின் கீழ் தனித்து போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இருப்பினும்  இன்று (திங்கட்கிழமை) இரவு நடைபெறும் கட்சியின் கூட்டத்தில் மற்ற மாவட்டங்கள் குறித்த இறுதி முடிவு தீர்மானிக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.