முன்னாள் முதலமைச்சருடைய கேள்வி பதில் அறிக்கைகள் எல்லாம் இந்த காலத்திற்கு பொருந்தாது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் .

முன்னாள் முதலமைச்சருடைய கேள்வி பதில் அறிக்கைகள் எல்லாம் இந்த காலத்திற்கு பொருந்தாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சருடைய கேள்வி பதில் அறிக்கைகள் எல்லாம் இந்த காலத்திற்கு பொருந்தாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.அகில இலங்கை சைவன் நற்பணி மன்றத்தின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் வடமராட்சி எள்ளங்குளம் முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் த.பிரதீபன் தலமையில் இடம் பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது ஆயுத பலங்கள் இருந்தபோது  இவை பொருந்தும் இப்போது அவை பொருந்தாது.அதை அப்படியே தொடர்ச்சியாக நாங்கள் ஒன்றையும் அடையாமல் அந்த வழிகளை தேட வேண்டுமேயொழிய அடைய முடியாதவற்றை நாங்கள் சிந்தித்து மீண்டும் இருக்கிறவற்றை இழந்துவிடக் கூடாது. இதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அங்கே இன்னும் ஒரு கட்சி அவர்களால் எந்த தீர்வையும் முன் வைக்கவில்லை. ஆனால் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்தாலும் அதை பிழை காண்பதே அவர்களது வேலை.அவர்களது கொள்கையாக இருக்கிறது.ஒரு புறம் முன்னாள் முதலமைச்சர் மறுபுறம் முன்பு பேர்போன கட்சி.தற்போது நான் சொல்லவில்லை.  இதற்கு அப்பால் பேரினவாத கட்சிகள் உள் நுளைந்துள்ளன.உங்களுக்கு இருக்கின்ற ஒரே தெரிவு நம்பிக்கையான தெரிவு என்றும்  தமிழ் மக்களை  கைவிடாமல் நாங்கள் எவருக்கும் விலை போகாமால் மிக சாணக்கியமாக இருக்கும் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே என்றார் இந்நிகழ்வில்
 மங்கள விளக்குகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், பாரியார், ஆலய நிர்வாக உறுப்பினர்  த.பிரதீபன், ஆலய தலைவர் ஆ.இரத்தினம், கலைஞான வாருதி கி.வெள்ளிமலை, எள்ளங்குளம் ஆலய நிர்வாக ஆலோசகர் சி.சிவஞானம், ஆலய உபதலைவர் சி.சிவாஜிநாதன், அனுசரணையாளர்களான திரு திருமதி விநோத் லக்சனா ஆகியோர் ஏற்றினர்.
தொடர்ந்து வாழ்த்துரைகளை கலைஞானவாருதி கி.வெள்ளிமலை, ஆலய போசகர் சி.சிவஞானம், ஆலய உபதலைவர் சி.சிவாஜிநாதன், தொடர்ந்து அறநெறி விழிமிய உரையை  அகில இலங்கை சைவன் நற்பணி மன்ற செயலாளர் சிவத்திரு சைவதீபச்சுடர், சைவசிரோன்மணி  இ.நாகேந்திரராசா சிறப்பு சொற்பழிவினை ஓய்வு பெற்ற வடமாகாண தலமைப்பீட சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் வெ.சுப்பிரமணியம்,  ஊடகவியலாளர் சூரன் ஏ.ரவிவர்மா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்

 ஆகியோர் வழங்கினர்.தொடர்ந்து 23 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் துவிச்சக்கர வண்டிகளையும் நிகழ்வின் பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு கௌரவ விருந்தினர்கள் வழங்கி வைத்தனர்.

இதில்  பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் குழும ஸ்தாகருமான ஈ.சரவணபவன்,  திருமதி சரவணபவன்,  கரவெட்டி பிரததேச சபை உறுப்பினர்களான செ.பிரதாப்,க.பரஞ்சோதி, பொ.வியாகேசு,க.இரத்தினம் ந.சுதாகர் ,ப.நிலாங்கதன், பா.இந்திராணி, வல்வெட்டித்துறை நகரசபை  உப தவிசாளர் ஆ.ஞாநேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.தர்மலிங்கம் மற்றும் நலன்விரும்பிகள் கிராம மக்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.