சுவிஸில் ஏழு மாநிலங்களில் உணவகங்களும், மதுச்சாலைகளும் மூடப்பட்டுள்ளன

திசினோ, பாஸல் லான்ட், யூரா, கிறபுய்ன்டென், நொய்யென்பூர்க், யெனீவா மற்றும் ஏழாவது மாநிலமாக வால்லிஸ் மாநிலம் ஆகிய அனைத்து மாநிலங்களில் அவசிய அன்றாட தேவைக்கான பொருட்கள் விற்கும் கடைகளையும், மருந்தகங்களையும் தவிர ஏனைய அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் பின் சுவிஸ் நாடு முழுவதுமே இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று மக்கள் வேண்டுகோள் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சுவிஸ் அரசு இன்று, 16.03.20 முடிவெடுக்கப்போகின்றது.