யாழ்.வல்லைவெளியில் இன்றிரவு சடலம் மீட்பு..! நெல்லியடி பொலிஸாா் விசாரணை..

வடமராட்சி- வல்லைவெளி பகுதியில் வயோதிபா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். நேற்றிரவு பொலிஸாருக்கு பொதுமக்கள் சிலா் வழங்கிய தகவல் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவா் பருத்துறையை சோ்ந்த ஒருவா் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்ட நிலையில் காணாமல்போயிருந்ததாக கூறப்படுகின்றது.
சடலம் நெல்லியடி பொலிஸாாினால் மீட்கப்பட்டு பருத்துறை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டிருக்கின்றனா்.