மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு சுயமாக  கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

 கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக இலங்கையின் சகல பாகங்களிலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன  தனியார் கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன எனவே மாணவர்கள் வீடுகளில் இருந்து தங்களுடைய பாடப் புத்தகங்களை வைத்து சுயகல்வியினை மேற்கொள்ளுவதோடு  தங்களுடைய பாடசாலை விடுமுறையை கல்விக்காக பயன்படுத்துங்கள் எனவும் கல்வி ராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார் ஏற்கனவே நாங்கள் கல்வியில் பின் தங்கி உள்ளோம் எனவே மாணவர்களாகிய நீங்கள் உங்கள் கற்றல் செயற்பாடுகளை வீட்டில் இருந்தவாறு சுயமாக உங்கள் பாடப் புத்தகங்களை வைத்து சுய மீட்டல் கல்வியை மேற்கொள்வதன் மூலம் தகுந்த பெறுபேற்றினை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். நீண்ட  விடுமுறை கிடைத்துள்ளது அந்த விடுமுறையினை கல்வி செயற்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கோரிக்கை விடுத்துள்ள விஜயகலா மகேஸ்வரன் யுத்தம் நடந்த காலத்தில் வடக்கு மாகாணம் கல்வியில் முன்னிலையில் இருந்தது எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாம் கல்வியில் பின்தங்கி உள்ளோம் யுத்த காலத்தில் குப்பிவிளக்கில் கல்வி கற்றவர்கள் தான் இன்று பல உயர் பதவிகளில் வைத்தியர்களாகவும் பொருயியளார்களாகவும் உள்ளார்கள் எனவே எமக்கு பாடசாலை தனியார் கல்வி நிறுவனங்களில் கற்றல் செயற்பாடுகளை போன்று தங்களுடைய சுய கல்வியும் தங்களுடைய பெறுபேற்றினை உயர்த்தும் எனவே அந்த வழிமுறையினை குறித்த விடுமுறையில் நீங்கள் பின்பற்றி கொள்வதன் மூலம் எமது வடக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தினை மென்மேலும் உயர்த்த முடியும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்