தீ விபத்தால் பற்றி எரிந்தது தும்புத்தொழிச்சாலை.

யாழ் எழுதுமட்டுவாழ் ஏ9 வீதிக்கருகாமையில் அமைந்துள்ள தும்புத்தொழிச்சாலை தீ பற்றி  எறிந்ததில் பல லச்சம் பெறுமதியான தென்னம் பொச்சுக்கள் தீக்கரையானது.  குறித்த சம்பவமானது நேற்று  மாலை ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது தும்புத்தொழிச்சாலைக்கு அருகாமையில் காணப்படும் காட்டிற்கு இனம் தெரியாத நபர் களால் தீ வைக்கப்பட்டுள்ளது. காட்டிற்கு வைக்கப்பட்ட தீ பரவலானது தும்புத்தொழிச்சாலையின் வெளியில் அடுக்கப்பட்டுள்ள பொச்சுக்கள் மீது பரவியமையால் குறித்த சம்பவம் இடம் பெற்றதாக கூறப்படுகிறது..

குறித்த தீ விபத்தினை இராணுவத்தினர் ,தென்மட்சி தீ அனைப்பு படையினர்கள் மற்றும் ஊர் வாசிகள் இணைந்து கட்டுபாட்டிற்கு கொண்டுவந்தனர். குறித்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரனையை கொடிகாம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..