கொரோனா வைரஸ் பரவலை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த அரசு திட்டம்..!

எதிா்வரும் திங்கள் கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரச, வங்கி, வா்த்தக விடுமுறையாக அது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை அடுத்த 2 வாரங்களுக்கு பொது நிகழ்வுகளை நடாத்துவதற்கு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படாது. என பொலிஸ் தலமையகம் அறிவித்திருக்கின்றது.
மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கையினை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி
நாட்டு மக்கள் பாதிக்கப்படும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவோா் பிடியாணை இன்றி கைது செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவா்
எனவும் பொலிஸ் தலமையகம் எச்சாித்துள்ளது.