கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 1719பேர் சந்தேகத்தின் பேரில் கண்காணிப்பு!

கொரோனா வைரஸ் கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்துவரும் அரசு நாளை முதல் கொழும்பின் மிக முக்கிய வர்த்தக கட்டிடங்களை தற்காலிகமாக மூட ஆலோசித்து வருகிறது.
இதுவரை 1719 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 18 கண்காணிப்பு மையங்கள் மூலம் இது நடந்து வருகிறது.
அதேசமயம் மார்ச் முதலாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரை இத்தாலியில் இருந்து இலங்கை வந்தோர் தொடர்பில் தகவல்கள் திரட்டப்படுகின்றன.
இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஆஸ்திரியா, கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து வர விசா வழங்குவது 2 வாரங்களுக்கு நிறுத்தப்படும் அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்தது.
மாலைதீவு , சிங்கப்பூர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் ETA விசா இன்று நள்ளிரவு (15) முதல் இடைநீக்கம் செய்யப்படும்.