பொருட்களை பதுக்குவோருக்கு எதிராக மாவட்ட செயலர் அதிரடி.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொருட்களை பதுக்கி வைத்து கூடுதலான விலைக்கு விற்பனை செய்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் எச்சரிக்கை

 யாழ்ப்பாண மாவட்டத்தில் எந்த  ஒரு பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை அதையும் மீறி பதுக்கலில்ஈடுபடும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்
நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வடக்கில் மக்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அதிகளவானபொருட்களைகொள்வனவு செய்வதில் ஈடுபட்டு வருவதோடு மொத்த வியாபாரிகள் பொருட்களை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இது தேவையில்லாத ஒரு விடயம் கொழும்பிலிருந்து பொருட்கள் வழமைபோன்று யாழிற்கு எடுத்துவரப்பட்டு கொண்டிருக்கின்றன அதைவிட நான் தற்பொழுது கூட்டுறவு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளேன் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை தாராளமாக வழங்குமாறு எந்தவித பிரச்சனையும் இல்லாது மக்களுக்கு விநியோகிக்கு மாறும்.. அத்தோடு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கட்டளை விடுத்துள்ளேன் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளை உடனடியாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன் எனவே பொதுமக்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு எரிபொருள் தட்டுப்பாடு என்று அச்சமடையத் தேவையில்லை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான சகல பொருட்களும் கொழும்பிலிருந்து வழமைபோல் கொண்டுவரப்படும் எனினும் அவ்வாறு ஒரு பிரச்சனை ஏற்படுமிடத்து அதிகாரிகளினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்