பல்பொருள் அங்காடிகளில் குவிந்த மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் பதற்றமான நிலையில் சில பாடசாலைகளிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து நாளைமுதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்கள் சற்று பதற்றமான நிலையிலேயே உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இன்று மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள், பல்பொருள் அங்காடிகளில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது குறித்த கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை பாரிய அளவில் கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக பல இடங்களில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் உள்ள பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் மக்கள் கூட்டத்தை அவதானிக்க முடிகின்றது.