பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நியமனத்திற்கு தற்காலிக தடை.உச்சநீதிமன்றம்.!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உட்பட்ட இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களுக்கும் ரவூப் ஹக்கீம் அவர்கள் அமைச்சராக இருந்த வேளை நியமிக்கப்பட்ட கல்விசாரா ஊழியர்கள் நியமனத்தில் பாகுபாடு காணப்படுவதாக தனிநபர் ஒருவரால் உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட  அடிப்படை உரிமைமீறல் வழக்கின் பிரகாரம் நேற்று முன்தினம் . (10/03/2020) மூன்றாவது தடவையாக  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறித்த அமைச்சருக்கு ஊழியர்களை நியமனம் செய்ய அதிகாரமளித்த 06.06.2006 திகதிய 876 ம் இலக்க சுற்று நிருபத்தை 02/03/2020 அன்றிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும்  அதற்காக சுற்று நிருபம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவித்து குறித்த வழக்கை  இனி  கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவித்தனர் இருப்பினும் குறித்த 06.06.2006 திகதிய 876 ம் இலக்க சுற்று நிருபத்தை நிரந்தரமாக இல்லாதொழிக்கப்படவில்லையாதலினால் வழக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த வருடம் ஜூன் 09ம் திகதி  தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாகவே நேற்று  முன்தினம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்துக்கு கடந்த வருடம்  500 பேர் இவ்வாறு நியமிக்கப்பட்டிருந்ததும் நியமனங்கள் அரசியல்  மயப்படுத்தப்பட்டு  ஒரு சமூக குழுவை முன்னிறுத்தப்பட்டமையும் அதை எதிர்து பல ஆர்பாட்டங்கள் இலங்கை புராகவும் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிட தக்கது.