தமிழ் தேசியத்தின் இருப்பை உறுதி செய்பவர்கள்தான் தமிழ் தேசியத்தின் இலக்கை அடைய முடியும்.அங்கயன் இராமநாதன் ல.

தமிழ் தேசியத்தின் இருப்பை உறுதி செய்பவர்கள்தான் தமிழ் தேசியத்தின் இலக்கை அடைய முடியும் என அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.இன்று வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அவரது வடமராட்சி கிழக்கு அலுவலகம் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது மிருகத்திற்கும் மனிதனிற்க்கும் என்ன வித்தியாசம் பலர் பல விதமாக சொல்லுவார்கள் ஆனால் மிருகங்கள் உணவுக்காக போராடும், மனிதன் உணவு உண்ட பின்பே போராடுவான்.நீங்கள் யோசித்து பாருங்கள் இரண்டு நாள் சாப்பிடவில்லை என்றால் நீங்கள் சாப்பாடு பற்றி யோசிப்பீர்களா? பொராட்டத்தை பற்றி யோசிப்பீர்களா?  அதிகம் சராசரி மக்களுக்கு சாப்பாடு பற்றித்தான் யோசிக்க வரும்,  உணவு என்று கதைக்கும்போது உதாரணமாக எமது இருப்பை பற்றியே சொல்கிறேன். எங்களுடைய இருப்பை உறுதி செய்வது   தான் எமது இலக்கை அடைவதறக்கான முதற் கட்ட பணி,    நான் யோசிக்கின்றேன் இங்கே இணைந்து இருக்கின்ற அனைவரும் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல, நாங்கள் தான உண்மையான தேசியவாதிகள். ஏனெனில் இருப்பை உறுதி செய்பவர்கள்தான் தமிழ் தேசியத்தின் இலக்கை அடைய முடியும், வெறுமனே தூரநோக்க திட்டங்களை மட்டும் பேசிக்கொண்டு எங்களுடைய இருப்பை உறுதிசெய்யாமல் இருப்பது எந்தவிதத்திலும் பயன் இல்லை ஏன்றார் மேற்படி வடமராட்சி கிழக்கு பிரதேச அலுவலக திறப்பு விழா பருத்தித்துறை தொகுதி இணைப்பாளர் திருச்செல்வம் செல்வதீபன் தலமையில் இடம் பெற்றது.இதில் மங்கள விளக்குகளை முனனாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான அங்கயன் இராமநாதன் மருதங்கேணியை சேர்ந்த மு.திரவியநாதன்,  சி.சின்னராசா வே.கோபாலபிள்ளை ஆகியோர் உட்பட பலரும் ஏற்றி வைக்க அலுவலகத்தை
 சம்பிர்தாய பூர்வமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் திறந்து வைத்தார் இந்நிகழ்வில் அங்கயன் இராமநாதனின் கட்சி செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.