இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தேசிய தொற்றுநோயியல் சிகிச்சை வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதை அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதி செய்துள்ளார்.
காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்ட ஒருவர் இரண்டு தினங்களின் முன்னர் ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
சுற்றுலாத்துறை வழிகாட்டியாக பணியாற்றும் ஒருவரே தொற்றுக்குள்ளாகியுள்ளார். அவர் பற்றிய மேலதிக அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலருடன் கடந்த சில நாட்களின் முன் அவர் சேர்ந்து பயணித்துள்ளார். இதன்போதே, அவர் தொற்றுக்கு இலக்காகியிருக்கலாமென நம்பப்படுகிறது.