இதோ வந்து விட்டது அனைவருக்கும் வட்ஸ்அப் டார்க் மோட் (Dark mode) வசதி

வட்ஸ் அப் பயனாளர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்திருந்த டார்க் மோட் (Dark mode) வசதி, அதிகாரப்பூர்வமாக அண்ட்ரோய்ட் மற்றும் ஐபோன் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது வட்ஸ் அப் டார்க் மோட் வசதி அனைத்து வகை ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கும் ஏற்ற வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர், பேஸ்புக் மெசஞ்சர், அமேசன் கிண்டில் போன்ற ஆப்கள் ஏற்கெனவே டார்க் மோட் வசதியை அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் இன்னும் அந்த வசதியை அறிமுகம் செய்யவில்லை.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரியில் வாட்ஸ் அப் பீட்டா செயலியில் டார்க் மோட் வசதிக்கான சோதனை தொடங்கப்பட்டது.
இதையடுத்து, தற்போது அண்ட்ரோய்ட் மற்றும் ஐபோன் பயனாளிகளுக்கு டார்க் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
உங்கள் சாதனத்தில் டார்க் மோட் வசதி எவ்வாறு இயக்கும் வழமுறை இதோ,
முதலில் அண்ட்ரோய்ட் மற்றும் ஐபோன்களில் டார்க் மோட் வசதி பெற வட்ஸ் அப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பின்பு கீழுள்ள படி முறைகளை பின்பற்றவும்.
படி 1 – புதிய வெர்சன் வட்ஸ்அப்பை மொபைலில் திறக்கவும்
படி 2 – வட்ஸ் அப்பில் செட்டிங்ஸ் (Settings) பகுதிக்கு செல்லவும்
படி 3 – செட்டிங்ஸ் பகுதியில் செட்ஸ் பகுதியை (Chats) தெரிவு செய்து அதில் டார்க் (Dark),லைட் (Light) மற்றும் சிஸ்டம் டிபோல்ட் (System Default) ஆகிய மூன்று அம்சம்கள் இருக்கும்.
படி4- டார்க் (Dark) அம்சத்தை தெரிவு செய்து இருண்ட பயன்முறைக்கு நுழையவும்.

படி 5 – அதே செயல்முறையைப் பின்பற்றி, டார்க் (Dark) என்பதற்கு பதிலாக லைட் (Light) என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் சாதாரண பயன்முறைக்கு திரும்பலாம்.
எனவே நீங்கள் டார்க் மோட் தேர்ந்தெடுக்கும்போது, வண்ணங்கள் இருண்டு விடும். இருப்பினும், வட்ஸ்அப்பின் டார்க் மோட் இன்ஸ்டாகிராமின் டார்க் மோட் முறையிலிருந்து சற்று வித்தியாசமானது.
குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில், நம் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் அதேசமயம் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தும் விதத்தில், குறைந்தஅளவு ஒளியில் இது இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த புதிய அப்டேட்டின் மூலம், ஸ்மார்ட்போன்களில் விரைவில் பேட்டரி சார்ஜ் விரயமாவது தடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வட்ஸ்அப் தனது சுயவிவரப் படத்தை மாற்றியதால் டார்க் மூட் வசதி பயன்முறையின் வெளியீடு உடனடிதாகத் தோன்றியது.
வட்ஸ்அப்பின் புதிய சுயவிவரப் படம் முந்தைய பச்சை நிறத்திலிருந்து மாறாக கருப்பு பின்னணியைக் கொண்டுள்ளது.