சிறப்புற இடம் பெற்ற தாளையடி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை இல்ல மெய் வல்லுனர் போட்டி…!

யா வடமராட்சி கிழக்கு தாளையடி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுனர் போட்டி நேற்று பாடசாலை அதிபர் சி பாலச்சந்திரன் தலமையில் பிற்பகல் 1:30 மணிக்கு இடம் பெற்றது.

முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து மைதான மேடை வரை அழைத்து வரப்பட்டு மங்கள் விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது.
மங்கள விழக்குகளை இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினரான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  யாழ் மாவட்ட அமைப்பாளர் ஐ.ரங்கேஸ்வரன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம அலுவலர் M.V. தவராசா பாடசாலை அதிபர் சி.பாலச்சந்திரன்,மருதங்கேணி கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சிறீராமச்சந்திரன் உட்பட பலரும் ஏற்றியதை தொடர்ந்து தேசிய கொடியை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அமைப்பாளர் ஐ.ரங்கேஶவரனும் மாகாண கொடியை மருதங்கேணி கோட்ட கல்வி பணி்ப்பாளர் திரு.சிறிராம சந்திரன், பாடசாலை கொடியை பாடசாலை அதிஒர் சி.பாலச்சந்திரன் ஆகியோர் ஏற்றினர்.
தொடர்நது ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சத்தியப் பிரமாணம் இடம் பெற்றது.
இதில் கருத்துக்களையும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்கள் வழக்கி வைத்தனர்.இதில் மருதங்கேணி கிராம அலுவலர் ர.காயத்திரி, பருத்தித்துறை பிரதேச சபை மருதங்கேணி வட்டார உறுப்பினர் சி.பிரசாத் அயல் பாடசாலை அதிபர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.