வடமராட்சி கிழக்கு முள்ளியான் மருத்துவமனை மருத்துவர் ஒழுங்காக சேவை புரிவதில்லை.! மக்கள் விசனம்…!

யாழ் வடமராட்சி கிழக்கு முள்ளியான் நிச்சியநவெட்டை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்க்கு நிரந்தர மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டும் அவர் தனது கடமையை பொறுப்புடன் செயற்படுத்தாதன் காரணத்தால் போக்கறுப்பு,  நிச்சியவெட்டை,

கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 900 குடும்பங்கள் வரை பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.குறித்த ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு பொறுப்பு வைத்தியர் ஒருவர் தினமும் காலை 8:00 மணிமுதல் பிற்பகல் 4:30 மணிவரை கடமையை மேற்கொள்ளவேண்டும்.
ஆனால் மருத்துவர் தினமும் ஒரு மணிக்கு பின்னரே கடமை மேற் கொள்வதாகவும் அவரை குறித்த மருத்துவ மனையின் நோயாளர் காவு வண்டியல் இயக்கச்சி சந்தி பகுதிக்கு சென்று ஏற்று பின்னர் 4:00 மணியளவில் மீள இயக்கச்சி சந்தியில் இறக்கி விட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிப்பதுடன் தாம் பிற மருத்துவ மனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் எனில் தமக்கு பளைக்கோ அல்லது மருதங்கேணிக்கோ செல்வதற்க்கு சரியான பாதுகாப்பான பாதை கூட இல்லை என்றும் இதனால் பெரிதும் சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் குறித்த மருத்துவர் தமது கடமை நேரத்தையாவது சரியாக செய்வதற்கு உரிய அதிகாரிகள் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்